பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரண் RRR படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு தனது வீட்டி விருந்து அளித்து சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றையும் அளித்து உள்ளார்.

மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா கேப்டன் விஜயகாந்த்? இயக்குனர் விஜய் மில்டன் விளக்கம்
RRR
பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடைபோடும் RRR திரைப்படத்தில் ராம் சரண், ஜுனியர் NTR, அஜய் தேவ்கன், ஆலியாபாட், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியான இந்த படம் இதுவரையில் 720 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய ஆந்திராவை சேர்ந்த அல்லுரி சீதாராம ராஜுலு மற்றும் கொமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை புனைவுடன் படமாக எடுத்திருக்கிறார் ராஜமவுலி. இதில் ராம்சரண் அல்லுரி சீதாராம ராஜுலுவாகவும் கொமரம் பீமாக ஜுனியர் NTR -ம் நடித்திருக்கின்றனர்.
விருந்து
இந்நிலையில், நடிகர் ராம் சரண் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் RRR திரைப்படத்தில் பணிபுரிந்த கேமரா கலைஞர்கள், இயக்குனர் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட 35 யூனிட்டை சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார் ராம் சரண்.
அதுமட்டும் அல்லாமல், இந்த விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பும், தலா ஒரு தங்க நாணயத்தையும் பரிசாக அளித்து உள்ளார் ராம் சரண்.இந்த ஒவ்வொரு தங்க நாணயமும் 11.6 கிராம் எடை கொண்டவையாகும். இந்த தங்க நாணயம் ஒன்றின் மதிப்பு 55,000-60,000 ருபாய் மதிப்புடையவை ஆகும்.
RRR திரைப்படத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ராம் சரண் அளித்த தங்க நாணயத்தில் ஒருபுறம் படத்தின் பெயரும் மற்றொரு பக்கத்தில் ராம் சரணின் பெயரும் இடம்பெறுள்ளது.
பல்வேறு மொழிகளில் வெளியாகி, வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் RRR படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, அப்படத்தில் படையாற்றிய கலைஞர்களுக்கு ராம் சரண் தங்க நாணயங்களை வழங்கியிருப்பது தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
பிரசவத்துக்குப் பிறகு முதல் முறையாக ரசிகர்களோடு உரையாடிய ஆல்யா மானசா! வைரல் ஸ்டோரி