இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் "RRR". இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது. நடிகர் அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது.
RRR
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.
இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தாவின் கோவா சுற்றுலா புகைப்படங்கள்!
சமந்தா பற்றி ராம்சரண்
இந்த படத்தின் வெளியீட்டிற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது தொகுப்பாளர் ராம்சரணிடம் கேள்வி கேட்டார். அதில் சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன சொல்வீர்கள் என கேட்ட கேள்விக்கு, வலிமையாக மீண்டும் மீண்டு வாருங்கள் என சொல்வேன் என ராம் சரண் பதில் அளித்தார். இந்த வீடியோவை சமந்தா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் சமந்தாவும், ராம் சரணும் ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. தற்போது நடிகை சமந்தா, சினிமா இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டு கோவாவில் தனது நண்பர்களுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடி வருகிறார். நடிகை ஷில்பா ரெட்டி மற்றும் வாசுகியுடன் கோவா வந்த நடிகை சமந்தா சுற்றுலா புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.