"காதல்'னு வந்துட்டா மனசு மட்டுமில்ல".. ராம் இயக்கத்தில் நிவின்.. வெளியானது TITLE ANNOUNCEMENT வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி நடித்துள்ள திரைப்படத்தின் பெயர் குறித்த 'Title Announcement' வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Bigg boss 6 tamil : "பாலாஜி மாரியே இருக்காருப்பா".. ராபர்ட் அடித்த கமெண்ட்.. கடுப்பான போட்டியாளர்.?

'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' ஆகிய உணர்வுப்பூர்வமான படங்களைக் இயக்கியவர் இயக்குநர் ராம். அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் பேசும் விஷயம், மக்கள் மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்லும்.

பேரன்பு படத்தை தொடர்ந்து, நடிகர் நிவின் பாலியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் ராம்.

மாநாடு உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். நிவின் பாலியுடன் நடிகர் சூரி, நடிகை அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது.

அடுத்தடுத்து கேரளா, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும், ராம் - நிவின் பாலி படத்தின் படப்பிடிப்புத் தள புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்ததாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படத்தின் பெயர் குறித்த Title Announcement வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. "ஏழு கடல் ஏழு மலை" என இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோவில் கடைசியில் வரும் வசனம் ஒன்று, தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

"காதல்'னு வந்துட்டா மனசு மட்டுமில்ல. உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்" என நிவின் பாலி பேசும் வசனம் ஒன்றும் இறுதியில் வருகிறது. இந்த வசனம், பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.

Also Read | Biggboss6 Tamil : "ஜனனி நட்பு தான் வேணும்".. GP முத்து சொன்ன காரணம் கேட்டு Viral ஆக்கிய ரசிகர்கள்!!

தொடர்புடைய இணைப்புகள்

Ram and nivin pauly movie title announcement video released

People looking for online information on Anjali, Director Ram, Nivin Pauly, Nivin Pauly Movie title Updates, Soori will find this news story useful.