"ஆயிஷா FRIENDSHIP ஓகே, தனா உங்களுக்கு பிரச்சனையா?" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - ராம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.

இதற்கு மத்தியில், கடந்த வார இறுதியில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியான ராம், Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்ய கருத்துக்களை ராம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதே போல, அசீம், விக்ரமன் உள்ளிட்டோருடனான நட்பு பற்றியும் நிறைய விஷயங்களை ராம் பேசி இருந்தார்.

ஆயிஷாவுடன் நட்பாக இருக்கும் உங்களுக்கு, தனாவுடன் பிரச்சனையா என நெறியாளர் கேட்க, இதற்கு பதிலளித்த ராம், "தனா எனக்கு பிராப்ளம் எல்லாம் இல்ல. அவங்களுக்கு தான் நான் ப்ராப்ளம். பாக்குறவங்க எல்லாம் அப்படித்தான் நினைச்சுக்கிறீங்கன்னு தோணுது. தனாவுக்கு எனக்கும் பர்சனலா எந்த பிரச்சனையும் இல்லை. என் பக்கத்து ஊரு பொண்ணு தான் அவங்க. சில இடங்களில் அவங்க கேம் ஆடுன விதம் எனக்கு பெருசா ஈடுபாடு இல்லை.


ஒரு நல்ல டாஸ்க்லயும் சண்டை போட்டு, அத ஒரு மாதிரி ஆக்கிடுவாங்க. அது விஷயமா தான் எங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வந்தது தவிர பர்சனலா எதுவுமே இல்லை. ஆனா உக்காந்து பேசுற அளவுக்கு ஒரு ரிலேஷன்ஷிப் தனாகிட்ட இல்ல.

ஆனா ஆயிஷாக்கு முன்னாடி நான் உட்கார்ந்து பேசுவேன். அவளுக்கு என்ன பிடிக்கும். அவ சொல்லுவா, 'நீ எதுவா இருந்தாலும் மனசுல தோணுறத சொல்லிடுவ. இந்த மாதிரி ஆட்கள பிடிக்கும் அப்படின்றதுனால தான் உன்கிட்ட வந்து பேசினேன்' அப்படின்னு ஆயிஷா சொன்னா" என ராம் கூறி உள்ளார்.

"ஆயிஷா FRIENDSHIP ஓகே, தனா உங்களுக்கு பிரச்சனையா?" பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - ராம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ram about his friendship with ayesha and dhana in bigg boss

People looking for online information on Aysha, Bigg boss 6 tamil, Dhanalakshmi, Ram will find this news story useful.