தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
![ram about dhanalakshmi issue in doll house task explained ram about dhanalakshmi issue in doll house task explained](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/ram-about-dhanalakshmi-issue-in-doll-house-task-explained-new-home-mob-index.jpg)
சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.
இதற்கு மத்தியில், கடந்த வார இறுதியில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியான ராம், Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்ய கருத்துக்களை ராம் பகிர்ந்து கொண்டுள்ளார். பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமியிடம் தள்ளி விட மாட்டேன் என எச்சரித்தது தொடர்பாக சில கருத்துக்களை ராம் குறிப்பிட்டு இருந்தார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் Gender Equality இருப்பதாக பேசிய ராம், தனலட்சுமியுடன் பொம்மை டாஸ்க்கில் நடந்த சம்பவம் குறித்து தற்போது விளக்கம் அளித்த ராம், "என்னோட உயரத்துக்கும், வெயிட்டுக்கும் அவங்களோட உயரத்துக்கும், வெயிட்டுக்கும் கண்டிப்பா என்னோட பவர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். நம்மள படைச்ச விதம் அப்படி. மனசு அளவுலயும், உடல் அளவுலயும் தனலட்சுமி ரொம்ப வலிமையானவங்க தான். ஆனா அந்த பொம்மை டாஸ்க்ல கதவுக்கு முன்னாடி நின்ன தனலட்சுமி, எல்லாரையும் கைய புடிச்சு தள்ளிட்டு இருந்தாங்க. அப்ப நான், அவங்க கிட்ட 'இத எனக்கு பண்றதுக்கு டைம் ஆகாது. ஆனால் அத பண்ண மாட்டேன். ஏனென்றால் என் வீட்டுல, பொண்ணுங்கள அப்படி ட்ரீட் பண்ணனும்னு சொல்லி வளர்க்கல. அதனால நான் அப்படி பண்ண மாட்டேன். இத அட்வான்டேஜா எடுத்துக்காத'ன்னு தனாகிட்ட சொன்னேன்.
இதே நான் ஒரு பொண்ண தள்ளிவிட்டிருந்தா கண்டிப்பா அது தப்பா இருக்கும். என்னா ஒரு பொண்ண நம்ம பிஸிக்கலா வேதனைப்படுத்தவே கூடாது. அப்படித்தான் அம்மா, அப்பா எனக்கு சொல்லி வளர்த்தாங்க. அந்த இடத்துல நான் கண்டிப்பா யோசிச்சேன். ஏன்னா நான் தள்ளி தனாவுக்கு ஏதாவது ஆகும்ன்னு அத பத்தின யோசனை எனக்கு இருந்தது. ஆனா பொம்மை டாஸ்க்ல சுத்தி நடந்த எல்லா சண்டைலயும் நான் கொஞ்சம் சைலண்டா தான் இருந்தேன். கடைசில ஜெயிக்கவும் செஞ்சேன்" என தெரிவித்துள்ளார்.