பிரபல பாலிவுட் ஹீரோ.. தம்பியின் பிறந்தநாள்.. வீடியோ வெளியிட்டு வாழ்த்திய ரகுல் ப்ரீத் சிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் நடிகரான தமது தம்பியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

32 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தெலுங்கு & இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங் முக்கியமானவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் தான் ஜாக்கி.

நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் தனது பிறந்தநாளை காதலருடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர் ஜாக்கி பாக்னானி கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்,  தனது தம்பியும் பாலிவுட் நடிகருமான அமான் சிங்கிற்கு வாழ்த்து கூறியுள்ளார். ஏப்ரல் - 1 முட்டாள்கள் தினம் என்பதால் எனது முட்டாளுக்கு பிறந்தநாள் என ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டுள்ளார். மேலும் தனது தம்பியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh wishes her brother birthday

People looking for online information on Rakul Preet Singh will find this news story useful.