சிக்ஸ் பேக்கில் நடிகை ரகுல் ப்ரித் சிங்! சாப்பிடாமல் ரொம்ப கஷ்டப்பட்டு வச்சிருக்காங்க போல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை ரகுல் பிரித் சிங் தனது சிக்ஸ் பேக் உடலமைப்பு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

"வலிமை' படம் FDFS பார்க்க வருகை தரும் நடிகை ஜான்வி கபூர்? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

2017 ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கில் தடைச்செய்யப்பட்ட போதை பொருள்களை வினியோகம் செய்ததில் கருப்பு பணம் பரிமாற்றம் நடைபெற்றதாக சந்தேகத்தின் பெயரில் தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு போலிசார் விசாரணையில் 62 பேர் விசாரணை செய்யப்பட்டனர்.

மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சாட்சிகளான நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் புரி ஜெகநாத் உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு சில மாதங்களுக்கு முன் அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியது. அப்போது நடிகை ரகுல் பிரித் சிங் நேரில் அமலாக்கதுறையின் விசாரனைக்கு ஆஜரானது பரபரப்பு செய்தியானது.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங்கும் முக்கியமானவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் போட்டோவை ரகுல் பிரித் சிங் பகிர்ந்துள்ளார். அதில், இந்த போட்டோவை எடுத்த பிறகு உணவு உண்ண போவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிக்ஸ் பேக் உடலமைப்புக்கு கடுமையான உணவுக்கட்டுப்பாடு அவசியம், தண்ணீர் கூட மிக குறைந்த அளவே குடிக்க வேண்டும். இந்த சிக்ஸ் பேக் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு DON படக்குழு கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh Six Pack Photo goes Viral on social media

People looking for online information on சிக்ஸ் பேக், தீரன் அதிகாரம் ஒன்று, ரகுல் ப்ரித் சிங், Rakul Preet Singh, Six Pack will find this news story useful.