அமெரிக்காவில் சத்குருவுடன் GOLF ஆடிய நடிகை ரகுல் ப்ரித் சிங்.. செம வைரலாகும் சூப்பர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Advertising
>
Advertising

இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங்கும் முக்கியமானவர். சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய போட்டோ & நடனமாடும் வீடியோவை ரகுல் பிரித் சிங் பகிர்ந்தார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் தனது சமீபத்திய கோல்ஃப் ஆட்டத்தின் ஒரு காட்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருடன் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் மற்றும் ஈஷா சத்குரு ஆகியோர் ஆட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh Played Golf with Sadh guru Eesha

People looking for online information on Golf, Rakul Preet Singh, Sadhguru will find this news story useful.