கோரோனா பிரச்சனையால் இந்தியாவில் லாக்டவுன் காலகட்டம் நீடித்துக் கொண்டிருக்க, அனைத்து துறைகளும் முடங்கின. தற்போது பாதுகாப்பு விதிமுறைகளுடன் அத்தியாவசிய பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து தொடங்கி விட்டது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் பிபீ கிட் (PPE - Personal Protective Equipment), ஃபேஸ் மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்புடன்தான் பயணிக்க வேண்டும்.
ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அட்டாக் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக பட இயக்குனர் லஷய ராஜ் ஆனந்துடன் மும்பையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது. மும்பை விமான நிலையத்தில் இவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் தரப்பட்டன.
அதனை அடுத்து ரகுல் அதை அணிந்து ஒரு வீடியோவை வெளியிட்டார். விண்வெளி வீரர்கள் போல் இருக்கிறோம் என்று லஷ்ய ராஜ் ஆனந்த் கூற, நாங்கள் இப்படித்தான் பயணிக்க போகிறோம் என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார் ரகுல். இதுதான் தற்போதைய புதிய நார்மல் என்று அதற்கு ரசிகர் பதில் அளித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அட்டாக், பாலிவுட் இயக்குனர் லஷய ராஜ் ஆனந்தின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஆகஸ்ட் 2020 வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது. அரசு கூறிய விதிமுறைகளுடன் பட வேலைகளைத் தொடர்கிறோம். நிச்சயம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவோம் என நம்புகிறோம் என்றனர்