இவர் தான் என் காதலர்! அதிகாரபூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் சினிமா நடிகை!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரித் சிங் நேற்று 11.10.2021 அன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடினார். 

இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “ நன்றி காதலா!, இவ்வருடத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ தான். என் வாழ்வை வண்ணமயமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி! நாம் இருவரும் இணைந்து இன்னும் பல நினைவுகளை உருவாக்குவோம் ” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் காதலர் ஜாக்கி பாக்னானியும் இன்ஸ்டாகிராமில் மறுபதிவிட்டு அதே புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RAKUL PREET SINGH CONFIRMS HER LOVE AFFAIR WITH BOYFRIEND

People looking for online information on Rakul Preet Singh will find this news story useful.