பிரபல நடிகைகளை கவரும் மாலத்தீவு பீச் ஹோட்டல்! ஒரு நாள் வாடகை மட்டும் இவ்வளவு ரூபாயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு: பிரபல நடிகைகளை மாலத்தீவில் உள்ள பிரபல பீச் ஹோட்டல் கவர்ந்து வருகிறது.

Advertising
>
Advertising

31 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங்கும் முக்கியமானவர். சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய போட்டோவை ரகுல் பிரித் சிங் பகிர்ந்தார். அதில் அவர் மாலத்தீவில் சுற்றுலாவில் இருப்பதாக அறிவித்தார். 

பிரபல நடிகைகளான ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே, வேதிகா சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ரகுல் ப்ரித் சிங் மாலத்தீவில் உள்ள JW Marriott Maldives Resort & Spa பீச் ஹோட்டலில் தங்கி உள்ளனர். இன்ஸ்டாகிராமிலும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை குறிப்பிட்டு இருந்தனர். 

JW Marriott Maldives Resort & Spa ஹோட்டலில் ஒரு நாள் வாடகை கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் ஆகும். JW Marriott Maldives Resort & Spa ஐ வேலனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 55 நிமிட அழகிய கடல் விமானம் மூலம் அடையலாம். அதே போல் Male Airport (MLE) -ல் இருந்து JW Marriott Maldives Resort & Spa இடையே உள்ள தூரம் 214 கி.மீ.

இந்த ஹோட்டல் மாலத்தீவில் உள்ள வாகரு தீவு, ஷவியானியில் அமைந்துள்ளது. பாலிவுட் நடிகை சஞ்சனா சங்கியும் தனது 25-வது பிறந்தநாளை இந்த ஹோட்டலில் தான் கொண்டாடினார். 

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh at JW Marriott Maldives Resort Spa

People looking for online information on Andrea Jeremiah, JW Marriott Maldives Resort Spa, Malavika Mohanan, Rakul Preet Singh will find this news story useful.