மும்பை: RRR படம் பார்த்த பின் இன்ஸ்டகிராமில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் படம் பற்றி கருத்து கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் சூப்பர் ஜோடி "ரன்பீர் - ஆலியா" கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம்...! எப்போ? எங்க?
ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR". ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு. இந்த படத்துக்கு CBFC மூலம் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 5 நிமிடங்கள்.
தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
இந்நிலையில் படம் பற்றி நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். RRR படம் மற்றும் ஜூனியர் NTR குறித்து உங்கள் கருத்து என்ன? என அந்த ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு, "என்ன சொல்றது... ராம்சரண், ஜூனியர் NTR, ராஜமௌலி அற்புதமான படைப்பை கொடுத்து இருக்கிறார்கள். RRR படம் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை" என கூறியுள்ளார்.
RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியுள்ளது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியது. ஒரு வாரத்தில் இந்த படம் 710 கோடி ரூபாயை மொத்த வசூலாக உலகம் முழுவதும் வசூலித்து உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் இதுவரை புக் மை ஷோவில் அதிக மதிப்பீடு பெற்ற படமாக மாறியது. 555 K+ வாக்குகளுடன் 90% ❤️ விருப்ப குறியீட்டை பெற்றுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்திய சினிமா வரலாற்றில் விறுவிறுப்பான சாதனை ஆகும்.
போடு..'பீஸ்ட்' படத்தின் இந்தி உரிமம்.. கைப்பற்றிய 'அண்ணாத்த' பட வினியோகஸ்தர்..! செம சம்பவம்