"WEIGHT போட்டது காரணமானு தெரியல!".. மாற்றப்படுகிறாரா? பிரபல சீரியல் ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Raksha Holla: பிரபல ஜீ தமிழ் சீரியல் நாயகி எடை கூடியதால் சீரியலை விட்டு நீங்க வாய்ப்பிருக்கலாம் என்று தெரிவித்துள்ள விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Raksha Holla anbe sivam serial heroine அன்பே சிவம்
Advertising
>
Advertising

நாம் இருவர் நமக்கு இருவர்

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். நடிகர் செந்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த சீரியலில் முன்னதாக செந்திலுக்கு இணையாக நடித்துக் கொண்டிருந்தார் ரக்‌ஷா. இந்த சீரியலில் இருந்து பின்னர் ரக்‌ஷா வெளியேறியதும் பல ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

Raksha Holla anbe sivam serial heroine அன்பே சிவம்

ஜீ தமிழில் அன்பே சிவம்

இந்நிலையில் தான் ஜீ தமிழில் அன்பே சிவம் சீரியலில் ரக்‌ஷா தோன்றினார். ஆஹா, சூப்பராக எண்ட்ரி கொடுத்திருக்கிறாரே என்று அவருடைய ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். சீரியலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரியலில் ரக்‌ஷா நாயகியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சீரியலில் இருந்து மாற்றப்படுகிறாரா?

ஆனால் அவர் தற்போது அந்த சீரியலில் இருந்து மாற்றப்படுகிறாரா? என்பது போன்ற வதந்திகள் அதிகம் எழுந்துள்ளன.  இது தொடர்பாக அவரது நெருங்கிய தோழி குறிப்பிடும்போது, “ஒருவேளை ரக்‌ஷாவை மாற்றப்படுகிறார் என்றால், சேனல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் கிடைத்திருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சீரியலில் நீடிக்க 30%  வாய்ப்பிருக்கிறது

இதனிடையே இதுகுறித்து ரக்‌ஷாவிடம் நம் தரப்பில் இருந்து இது குறித்து கேட்டறிந்தபோது, “நான் சீரியலில் இருக்கேனா இல்லையானு எனக்கே இன்னும் சரிவர தெரியவில்லை. அப்படியான பேச்சுகளை கேட்க முடிகிறது. ஆனால் சீரியல் விட்டு போவதற்கு 70%மும் வாய்ப்பிருக்கிறது, அதேசமயம் சீரியலில் நீடிக்க 30%மும்  வாய்ப்பிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Weight போட்டது காரணமா இருக்குமா?

மேலும் அவ்வாறு, தான் சிரீயலைவிட்டு நீங்கினால், என்ன காரணமாக இருக்கும் என கேட்கப்பட்டபோது, “அதுவும் தெரியவில்லை, ஒருவேளை வெயிட் போட்டதுனால சீரியலை விட்டு மாற்றப்படுவதற்கு காரணமாக இருக்கலாம், இருப்பினும் அதுதான் காரணமா என்பதும், சீரியலில் தொடர்ந்து நீடிக்கிறேனா? என்பதும் குறித்த கேள்விகள் அனைவரிடத்தில் இருந்தாலும் யூகங்களுக்குள் இப்போதைக்கு போகவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: 'தேசிய விருது' இசையமைப்பாளர் டி.இமான் Birthday-வில் இயக்குநர் வெளியிட்ட மெகா அறிவிப்பு

மற்ற செய்திகள்

Raksha Holla anbe sivam serial heroine அன்பே சிவம்

People looking for online information on Anbe Sivam Serial, Raksha, Raksha Holla, ZeeTamil will find this news story useful.