பாவனி - நிரூப் KISS.. அமீர் ரியாக்‌ஷன தான் கவனிச்சோம்!.. அதே SCENE-ல ராஜூ என்ன பண்ணிருக்கார் பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: பிக்பாஸ் வீட்டில் நிரூப்க்கு பாவனி முத்தமிட்டதற்கு அமீரின் ரியாஷன் வைரலான அதே நேரம் ராஜூவின் ரியாக்‌ஷனும் வேற லெவலில் வைரலாகியுள்ளது.

Advertising
>
Advertising

ராஜூ - பாவனி 

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனி விசயத்தில் ராஜூ கேட்ட கேள்விகளால் அனல் பறக்கும் சம்பவங்கள் நடந்தன. முன்னதாக பாவனியை லவ் பண்றியா? என அமீரிடம் ராஜூ கேட்டதுமே அனைவருமே அதிர்ந்து போயினர். ட்ரூத் ஆர் டேர் டாஸ்கின் போது ராஜூ கேட்ட அந்த கேள்வியைத் தொடர்ந்து கொஞ்ச நாட்களில் அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக வருகை தந்தார்.

பாவனி - அபினய்

அதன் பின் அமீர் பாவனியிடம், அபினய் மற்றும் பாவனி இருவரின் உறவு குறித்து பேசினார். இதேபோல் அபினய் மற்றும் பாவனியின் உறவு குறித்து சிபியும் ராஜூவும் கருத்து சொன்னபோது பாவனி, அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என ஆவேசமாக பேசினார்.

பின்னர் அனைவரின் கருத்துடன் தான் ஒத்துப் போவதாக பாவனி கூறியதுடன், தனக்கும் அதே கருத்துதான் இந்த விவகாரத்தில் தோன்றுவதாக ராஜூவிடம் பாவனி கூறிய சம்பவம் யாராலும் மறக்க முடியாதது. ஏன் என்றால் ஏற்கனவே இந்த கருத்தை ராஜூ சொன்னபோது பாவனி, அவரை ஆவேசமாக எதிர்த்தார். ஆனால் தற்போது குளிக்கப் போகும் ராஜூவிடம் மடக்கி, நின்று சொல்லிக் கொண்டிருந்தார்.

குளிக்க போறேன்!

இதையும் விட்டு வைக்காத thuglife மன்னன் ராஜூ, பாவனி சீரியஸாக மனதில் இருப்பதை வாக்குமூலம் மாதிரி சொல்லிக் கொண்டிருந்தபோது, ‘குளிக்க போறேன்!’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். இதனிடையே அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் போய், பாவனி நிரூப்க்கு முத்தம் கொடுத்தபோது, அமீர் ஷாக் ஆகி பார்த்துக் கொண்டிருந்த பார்வை வைரலாகியுள்ளது.

ராஜூவின் செம்ம thuglife ரியாக்‌ஷன்

இதில், ராஜூவின் செம்ம thuglife ரியாக்‌ஷனும் இடம் பெற்றுள்ளது. ஆம், ராஜூவிடம் யாரோ சின்சியராக பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் பாவனி நிரூப்க்கு முத்தம் கொடுப்பதை அதிர்ச்சியுடன் பார்க்கும் அமீரை, ராஜூ ஒரு குறுநகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read: அட.. ‘அந்த சீசன்லயே’ BiggBoss-க்குள்ள பிரியங்கா வந்துருக்காங்களா? time travel பண்ணிருப்பாங்களோ.. Viral த்ரோபேக் ப்ரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

Raju viral thuglife reaction pavani kiss niroop biggbosstamil5

People looking for online information on Amir pavani kiss, Amir Pavani Raju, Pavani amir, Pavani amir kiss, Pavani Kiss Niroop will find this news story useful.