BB JODIGAL 2: கப்னு புடிச்சுகிட்ட ரன்பீர்.. அதுவும் வெரைட்டி ஸ்லாங்ல பேசுறார்யா.. செம க்யூட் வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில்  செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தில் நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்கள். தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை தென்னிந்தியாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார்.

Raju teaches tamil ranbir Kapoor viral reactions BB Jodigal 2
Advertising
>
Advertising

Also Read | அர்ஜூனின் முதல் மகள் ஹீரோயின்.. ‘வேற லெவல்’ யோசனையுடன் களமிறங்கிய 2-வது பொண்ணு.!

இந்நிலையில் இந்த பட ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி BB Jodigal நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய திரை உலக ஜாம்பவான்களான, இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் மூவரும் வருகை தந்தனர்.

Raju teaches tamil ranbir Kapoor viral reactions BB Jodigal 2

இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூருக்கு தமிழ் சொல்லித் தந்த ராஜூ, ஆங்கிலத்தில் அவருடன் உரையாடினார். அப்போது தமிழ் மக்களிடம், “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்பதற்கு எந்தெந்த வகையில் கேட்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார் ராஜூ. அதன்படி தமிழகத்தில் எல்லாரும் தமிழ் பேசினாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வட்டார வழக்கு ஒலி இருக்கிறது. இதை ஸ்லாங் என்கிறோம். அதன்படி மதுரையில் ஒருவிதமான ஸ்லாங் பேசுவார்கள், சென்னையில் ஒருவதுமான ஸ்லாங் பேசுவார்கள், கோயம்புத்தூரில் ஒரு விதமான ஸ்லாங் பேசுவார்கள். ஆகையால் ஒவ்வொரு வட்டார வழக்கு ஒலியிலும் எப்படி இருக்கீங்க என்று கேட்பது எப்படி என்று ரன்பீருக்கு ராஜூ சொல்லிக் கொடுத்தார்.

ராஜூ சொல்லி கொடுத்தபடி சென்னை வட்டார வழக்கு ஒலியில், “எப்படி கீர..?” என்றும், மதுரை வட்டார வழக்கு ஒலியில், “எப்படி இருக்க....?” என்று இழுத்தபடியும் ரன்பீர் பேசினார். இதே போல் ஹிந்தியில் மரியாதை கொடுப்பதற்காக ஜி போட்டு சொல்லுவார்கள். அதே போல் தமிழகத்தில் கோயம்புத்தூரில் மரியாதைக்காக ‘ங்’ சேர்த்து சொல்லுவார்கள் என்பதால், “எப்படி இருக்கீங்” என்று கேட்பதற்கு ராஜூ சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்னபடி ரன்பீர், “எப்படி இருக்கீங்” என்று கேட்கிறார். இவை ஒவ்வொன்றுக்கும் ரன்பீர் எப்படி முகத்தை வைத்துக்கொண்டு கேட்க வேண்டும் என்பதையும் ராஜூ சொல்லிக் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னரான ராஜூ, முன்னதாக விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸில் தம்முடைய பன்முக என்டர்யினிங் திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார். மிமிக்ரி, ஸ்பாட் கவுன்ட்டர், நகைச்சுவையாக பேசுவது என்று பல திறமைகள் உடைய ராஜூ, தற்போது விஜய் டிவியில் ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதே போல் பிபி ஜோடிகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் தற்போது பிரம்மாஸ்திரா பட ப்ரமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ரன்பீர் கபூர், நாகார்ஜுனா மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோரிடம் பிரியங்கா உடன் இணைந்து ராஜூ கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 

Also Read | Raja Rani 2: மருத்துவமனையில் மொத்த குடும்பமும் ஷாக்!.. "அப்ப நான் அவுட்டா..?" - நடிகரின் வைரல் பதிவு.!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raju teaches tamil ranbir Kapoor viral reactions BB Jodigal 2

People looking for online information on Bb jodigal 2, Brahmastra, Raju, Ranbir Kapoor will find this news story useful.