BIGG BOSS நினைவா ராஜூ எடுத்துட்டு போகும் பொருள் இதுதான்!.. ஃபீல் பண்ணி அவரே சொன்ன காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நெருங்கியது. இந்நிகழ்ச்சியில் ராஜூ டைட்டில் வின்னர் ஆகியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

Advertising
>
Advertising

குறும்படம்

முன்னதாக பிக்பாஸ் ஒவ்வொரு போட்டியாளரையும் அழைத்து, அவர்கள் குறித்த ஒரு AVயை போட்டு காட்டினார். அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் குறிப்பிட்ட அந்த போட்டியாளர் வாழ்ந்த மொத்த அனுபவத்தை எமோஷன் வாரியாக தொகுத்திருந்தனர்.

எந்த பொருளை எடுத்துச் செல்கிறீர்கள்?

இப்படி ராஜூவையும் அழைத்து அவருடைய AV வீடியோ போட்டு காட்டப்பட்டது. அப்போது அங்கு பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் எந்த பொருளை எடுத்துச் செல்கிறீர்கள் என பிக்பாஸ் ராஜூவிடம் கேட்டிருந்தார்.

ராஜூ எடுத்துச் செல்ல விரும்பும் பொருள்

அதற்கு ராஜூ அங்கிருந்த பொருட்களை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அங்கிருந்த போனுக்கு அருகில் சென்றுவிட்டு, அந்த போனை பார்த்து ஃபீல் பண்ணி பேசத் தொடங்கிவிட்டார். அந்த போன் பற்றிய பிக்பாஸ், “இந்த போனை எடுத்துட்டு போறேன் பிக்பாஸ்.

Also Read: அட.. BiggBoss வீட்ல மொத்தமா இந்த மனுசன் அழுதது இந்த ரெண்டே இடத்துல தானா? ‘கூல்’ ராஜூ பாய்!

ஏனென்றால், Pack your Bag என்று அந்த போன் காலில் எனக்கு சொல்லப்பட்டது. அந்த போன் காலை நான் எடுத்தபின் தான் என் வாழ்க்கை மாறுச்சு. ஆக, இந்த போன் கால் என்னோட என் வீட்ல இருந்துச்சுனா சந்தோஷமா இருக்கும்!” என்று சொன்ன ராஜூ, பிக்பாஸிடம், “பிக்பாஸ் நான் இந்த போனை எடுத்துக்கொண்டு செல்லட்டுமா?” என்று கேட்டார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ட்ரோஃபியுடன் ராஜூ

அதற்கு பிக்பாஸூம், “தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் ராஜூ” என்று கூறியிருந்தார். இதனிடையே 105 நாட்கள் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வடிவமான கிராண்ட் ஃபினாலேவில் பிக்பாஸ் ட்ரோஃபியுடன்  ராஜூ நின்று கொண்டிருந்த புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: எதிர்நீச்சல் அடி... ஜெயிச்சாப்புறம் trophy-யுடன் கெத்து காட்டும் ராஜூ.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Raju takes this thing as memory from bigg boss 5 house

People looking for online information on Bigg boss, Bigg Boss 5, Bigg boss 5 grand finale, Bigg Boss 5 Tamil, Bigg boss finale, Bigg boss grand finale, Bigg boss raju title winner, Bigg boss tamil 5 grand finale, Bigg boss tamil 5 title winner raju, Bigg boss title winner raju, BiggBossTamil5, Kamal Haasan, Raju title winner, Sivakarthikeyan, Vijay Television will find this news story useful.