"இந்த வேல தான் பாத்துட்டு இருந்தேன்! எத்தனையோ STARS-க்கு" .. அழுதுகொண்டே ராஜூ ரிவீல் செய்த உண்மை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

105 நாட்கள் ஓடிய விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

Advertising
>
Advertising

கிராண்ட் ஃபினாலே

அதன்படி,  ஃபினாலே நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்துவந்தனர். கமல்ஹாசன் தொகுத்துவழங்கும்  இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ராஜூ வெற்றி பெற்றுள்ளார்.

Also Read: எதிர்நீச்சல் அடி... ஜெயிச்சாப்புறம் trophy-யுடன் கெத்து காட்டும் ராஜூ.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே இண்ட தகவல் சோஷியல் மீடியாவில் பரவியதுடன், ராஜூ பிக்பாஸ் டைட்டில் வின்னர் ட்ரோஃபியுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்களுமே இணையத்தில் தீயாய் பரவி வந்தன.

முன்னதாக கிராண்ட் ஃபினாலேவுக்கு முதல் நாள் அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து அவர்கள் பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்து முடித்த  AV குறும்படங்களை பிக்பாஸ் போட்டிக்காட்டினார். அப்படி ராஜூவையும் அழைத்து பிக்பாஸ், அவருக்கான நினைவுக் குறும்படத்தை போட்டிக் காட்டினார்.

நல்ல பாடி, நல்ல பிரெய்ன்

அதன்பின் பிக்பாஸ் ராஜூவிடம் பேசும்போது,  “ராஜூ உங்களை உலகுக்கு பரீச்சயப்படுத்துவதற்காக இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தீங்க,  குறைவா பேசி நிறைய உள்ளங்கள சம்பாதிச்சீங்க... 

Also Read: அட.. BiggBoss வீட்ல மொத்தமா இந்த மனுசன் அழுதது இந்த ரெண்டே இடத்துல தானா? ‘கூல்’ ராஜூ பாய்!

நாளடைவில் நகைச்சுவையின் நாயகனாக  கவர்ந்தீங்க. பல நேரங்களில் கோபத்த கட்டுப்படுத்தி, சில நேரங்களில் அதுக்கு இரையானீங்க. பின்னர் தம்பிக்கு அண்ணனாக, அண்ணனுக்கு தம்பியாக, இந்த வீட்டின் எண்டர்டெயினராக இருந்து வருகிறீகள். நல்ல பாடி, நல்ல பிரெய்ன் இருக்கும் ராஜூ பாய் நீங்கள்!” என்று குறிப்பிட்டார். 

இந்த வேல தான் பாத்துட்டு இருந்தேன்!

அப்போது பேசிய ராஜூ, “கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி என்னோட வேலையே இதுதான், நான் உட்கார்ந்து AV கட் பண்ணிக் கொண்டு இருந்தேன். பல ஸ்டார்ஸ்க்கு நான் குட்டி குட்டி content-ஆக எடுத்து இப்படி  AV கட்  பண்ணி போடுவேன். ஆனால் இன்னைக்கு யாரோ எனக்கு இப்படி பண்ணிருக்காங்க.”  என்று உருக்கமாக பேசினார்.

Also Read: BiggBoss நினைவா ராஜூ எடுத்துட்டு போகும் பொருள் இதுதான்!.. ஃபீல் பண்ணி அவரே சொன்ன காரணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Raju reveals what he did in tv shows emotional biggboss tamil 5

People looking for online information on Bigg Boss 5 Tamil, Bigg Boss Tamil 5, BiggBoss Raju, Biggboss raju title winner, Biggboss title winner raju, Sivakarthikeyan, SK23, Vijay tv will find this news story useful.