“HEY இட்ஸ் ஓகேடா .. NOMINATION-ல பாத்துக்கிறேன்!”.. ராஜூவின் OBSERVATION காமெடி! தரமான சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் இதுவரை நமீதா மாரிமுத்துவை தவிர்த்து 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகிவிட்டனர். முன்னதாக நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறுவதாக பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

raju performs biggboss women contestent voice imitates abhinay
Advertising
>
Advertising

அடுத்து பிக்பாஸில் இருந்து நாடியா, அபிஷேக்,  சின்ன பொண்ணு அடுத்தடுத்து வெளியேறினர். இப்படி 3 எலிமினேஷன்கள் அடுத்தடுத்த வாரங்களில் நடந்தன. இதனை தொடர்ந்து அடுத்து யார் வெளியேறப் போவது என்கிற கேள்வி ஒருபுறம் எழுந்து வருகின்றது. இன்னொருபுறம் பிக்பாஸ் வீட்டுக்குள் தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறியிருக்கிறது. முன்னதாக விஜயதசமி நாளன்று பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் விதவிதமாக வேடங்களை அணிந்து நாடகங்களை நடத்தினர்.

raju performs biggboss women contestent voice imitates abhinay

இந்த முறை தீபாவளி வரும் முன்னரே போட்டியாளர்கள் சிறப்பு திரைப்பட கேரக்டர்களின் வேடங்களை அணிந்து சில நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிலையில் தீபாவளி நாளன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் புத்தாடைகள் அணிந்து தங்களுக்கு பிடித்த ஆடல், பாடல், கொண்டாட்டங்கள் என்று விமர்சையாக தீபாவளியைக் கொண்டாடினர். குறிப்பாக விஜய் டிவி பாடகர்கள், காமெடியன்கள் பலரும் அவர்களை ஒரு கண்ணாடிக் கூண்டு அறையில் இருந்தபடி எண்டர்டெயின் செய்து பிக்பாஸ் போட்டியாளர்களை மகிழ்வித்தனர்.

அதன்பின்னர் ராஜூ அனைவரையும் போல நடித்துக் காட்டினார். முன்னதாக ராஜூ பல குரல்களில் மிமிக்ரி செய்து, பிக்பாஸ் வீட்டுக்குள் அசத்தினார். குறிப்பாக எம்.ஆர்.ராதா, ரஜினி பிறகு தன்னுடைய குருநாதர் பாக்கியராஜ் என பல குரல்களில் பேசினார். அவ்வப்போது கவுண்ட்டர்களை அடிப்பதில் வல்லவரான ராஜூ தற்போது  ஒவ்வொரு போட்டியாளரின் குரலிலும் பேசினார்.



குறிப்பாக பெண் போட்டியாளர்களான மதுமிதா, அக்ஷரா, தாமரை என பெண் போட்டியாளர்களின் குரல்கள் மற்றும் உடல் மொழியை அப்படியே பிரதிபலித்தது நடந்து காட்டி பாவனை செய்த ராஜூ, பாவனி மாதிரியும் நடித்துக் காட்டினார். அவருக்கு பிரியங்கா உதவினார். அதில் பாவனியை இமிடேட் செய்த ராஜூ, ‘வேண்டாம் விட்டுடுங்க’ என்று, எதை பேச வந்தாலும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் பாவனியின் இயல்பை பிரதிபலித்தார்.

உணவு பொருளை தவறுதலாக பிரியங்கா அபினய் மீது கொட்டினால், அபினய் எப்படி ரியாக்ட் பண்ணுவார்? என்று பிரியங்கா கேட்க, “நீங்கள் கொட்டுங்கள்” என்கிறார் ராஜூ, பிரியங்கா சும்மா விளையாட்டாக ஏதோ ஒன்றை ராஜுவின் மீது கொட்டுவது போல் காட்டுகிறார்.

அப்போது ராஜூ ஒரு கணம் அபினய்யாக மாறி , “என்ன ஆச்சு? உங்களுக்கு ஒன்னும் இல்லையே?.. பரவாயில்ல.. பரவாயில்ல.. வாங்க.. நோ ப்ராப்ளம்.. நான் உங்களை நாமினேஷன்ல பார்த்துக்கிறேன்” என்று பேசி காட்டி, அபினய் கிட்டத்தட்ட இப்படித்தான் செய்வார் என்பது போல ராஜூ தன் உடல் மொழியை வெளிப்படுத்தியும் காமெடி செய்து அசத்தினார்.

இப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு போட்டியாளரையும் துல்லியமாக கவனித்து அவர்களின் உடல்மொழி, குரல் என அனைத்தையும் இமிடேட் செய்து அசத்திய ராஜூவுக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Raju performs biggboss women contestent voice imitates abhinay

People looking for online information on Abhinay, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Diwali, Pavani, Raju, Thuglife, Trending, Viral will find this news story useful.