"நக்கலா ஏன் அந்த பாட்டை பாடுனீங்க?".. தாமரை - இசைவாணி ‘புயல்’ வேக சண்டை.! குறுக்கே போன ராஜூ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் இசைவாணி & தாமரை மற்றும்  இசைவாணி & அண்ணாச்சி உரசல்கள் எப்போதும் சற்றே சரவெடியாக இருக்கக்கூடியவை.

raju on thamarai and isaivani fight mirror task biggbosstamil5
Advertising
>
Advertising

அந்த வகையில் தற்போது இசைக்கும் தாமரைக்கும் நடந்த வாக்குவாதம் பரபரப்பாகி இருக்கிறது. மிரர் டாஸ்கில் இசைவாணி குறித்து தாமரை கருத்துச் சொல்லவேண்டும். குறிப்பிட்ட நேரம், தாமரை கருத்து சொல்லி முடிக்கும்வரை இசைவாணி அதை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

raju on thamarai and isaivani fight mirror task biggbosstamil5

ஒருவேளை இசையால் முழுமையாக, தாமரை சொல்லும்  தன் பற்றிய விமர்சனத்தை கேட்க முடியாமல் போய்விட்டால் விலகிக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு விலகும் போது ஒரு பேட்ஜை தாமரையிடம் இசைவாணி கொடுக்க வேண்டும். இந்த நிலையில் இசைவாணியிடம், கண்ணாடியாக இருந்து தன் கருத்தை முன்வைத்த தாமரை ஒரு கட்டத்தில் குறித்த நேரத்துக்குள் பேசி முடித்து விட்டதால், மீதம் இருந்த நேரத்தில் பாடலை பாடினார்.

அவர் பாடியது பிரபல பாடலான  ‘தினமும் சிரிச்சி மயக்கி’ என்கிற பாடல். இந்தப் பேச்சுகள் முடிந்த பிறகு பெல் அடித்து அனைவரும் அமர்ந்து இருந்தபோது இசைவாணி, “எப்படி நீங்கள் அந்த பாடலை என்னை பார்த்து நக்கலாக பாடலாம்?” என்று கேட்க, தாமரையோ, “நான் எதார்த்தமாக தான் பாடினேன்.. எவ்வளவு நேரம் தான் நான் பேசிக்கொண்டே இருப்பேன்? உன்னை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்? நீயும் எவ்வளவு நேரம் தான் அதைக் கேட்டுக் கொண்டிருப்பாய்.

உன்னைப் பற்றி பேசுவதற்கு அதன் பிறகு ஒன்றும் இல்லை. இருந்தால் தான் பேச முடியும்!” என்று கூற, இசைவாணியோ, “பார்க்கும் மக்களுக்கு தெரியும்.. நீ நக்கலாக உள்நோக்கத்துடன் பாடினாயா இல்லையா என்று..” என்று சொல்ல, மீண்டும் தாமரை, “அதே மக்களுக்கு தெரியும்.. என்ன நடக்கிறது என்று.. மக்கள் என்னை மட்டும் பார்க்க மாட்டார்கள்.” என தாமரை கூறினார்.

மேலும் பேசிய தாமரை, இசைவாணியை குறிப்பிட்டு, “நீ பேசும் பொழுது நிறைய முறை எனக்கும் கஷடமாக இருந்தது. எத்தனை முறை நானும் பொறுமையாக போவேன்? மனசாட்சியைக் கொன்று விட்டு என்னால் வாழ முடியாது!” என்று காட்டமாக கூறுகிறார்.

அப்போது இசைவாணியிடம் பேசிய ராஜூ, “தாமரை தான் பேசி முடித்ததால் பாட்டு பாடினாதாக சொல்றாளே? அதை ஏன் நம்ப மறுத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறார்.   “நீங்கள் சப்போர்ட் பண்ணுங்கள. என்ன வேணா நீங்கள் சொல்லுங்கள்.. என்னை மட்டும்தான் இப்படி நடத்துகிறீர்கள்!” என இசைவாணி பதில் கூற, ராஜூ அமைதியானார்.

Raju on thamarai and isaivani fight mirror task biggbosstamil5

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, IsaiVaani, Isaivani, Thamarai vs isaivaani, Thamarai vs isaivani, Thamaraiselvi will find this news story useful.