“அந்த 10 பேர மட்டும”.. பிக்பாஸிடம் புலம்பும் ராஜூ பாய்!.. அதுல தான் சம்பவமே இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் பிக்பாஸ் கேமராவை பார்த்து ராஜூ பேசியிருக்கும் விஷயங்கள் டிரெண்ட் ஆகி தரமான சம்பவமாக மாறி இருக்கின்றன.  பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கேமராவை பார்த்து புலம்புவதும், பேசுவதும், புகார் அளிப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

raju jeyamohan funny talks infront of biggboss camera unseen

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா பிக்பாஸூக்கு கண்மணி என்ற பெயர் சூட்டியிருந்தார். அதை கிண்டலடிக்கும் விதமாக ப்ரியங்கா அவ்வப்போது, கேமரா முன்னாடி நின்று மணியடித்து காட்டுவார். இதேபோல் பிக்பாஸை பெருசு என்றும் பிரியங்கா சொல்லி அழைப்பது உண்டு.

raju jeyamohan funny talks infront of biggboss camera unseen

அண்மையில் சுருதி, பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் போட்டியாளர்களிடையே நடக்கும் சிக்னல், மெசேஜிங் உள்ளிட்டவை பற்றி நேரடியாக பிக்பாஸ் கேமராவுக்கு முன் நின்று, “இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறீங்க பிக்பாஸ்.. என்ன இதெல்லாம்?” என்று கேட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இமான் அண்ணாச்சியுடன் இணைந்து, ராஜூ, பிக்பாஸ் கேமராவை பார்த்து, “இந்த வீட்டில் 16 பேர் இருக்கிறார்கள்.. அதில் 10 பேரை மட்டும் பிடித்து பூட்டி வைத்து விடுங்கள். நான், இமான் அண்ணாச்சி என ஒரு 6 பேர் இருக்கிறோம். பைத்தியமே பிடிக்கிறது!” என்று புலம்புகிறார். பார்ப்பவர்களுக்கு பிக்பாஸிடம் தனக்கு காயின் கிடைத்துவிட்டது என்று ரிஜிஸ்டர் பண்ணுவது போல ஒரு தோற்றத்தையும் உண்டுபண்ணுகிறார். ஏனென்றால் ரூல்ஸ் படி, காயினை கைப்பற்றியவர்கள் பிக்பாஸிடம் கேமராவில் காட்டி, தன்னிடம் காயின் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ராஜூ முன்பெல்லாம் ஏகத்துக்கும் பேசுவார். பயங்கரமாக கலாய்ப்பார். ட்ரோல் செய்வார். இப்போதெல்லாம் மனுசன் சைலன்ட்டாகவே தக் லைஃப் பண்ண ஆரம்பித்துவிட்டார். பிரியங்காவும் அபிஷேக்கும் சேர்ந்து ராஜூவை காயின் விஷயத்தில் கட்டம் கட்டியபோது, “சரி பேசுங்கள் பேசி முடியுங்கள்! என்னதான் சொல்றீங்க பார்ப்போம்” என்பதுபோல் முகபாவனைகளை வைத்துக்கொண்டு மிரட்டினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் காயின்களை எடுத்து வைத்துக்கொண்டு நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நண்பர்களை காப்பாற்றும் படலம் போய்க்கொண்டு இருக்கிறது. இதில் குறிப்பாக ஜெயில் சாவியை வைத்துக்கொண்டு, காயின் வைத்திருப்பது போல ஒரு எஃபக்ட் கொடுத்து அனைவரையும் சுற்றலில் விட்டார் ராஜூ. இப்படி பங்கமாக கலாய்த்து வரும் ராஜூ தற்போது பிக்பாஸ் கேமரா முன்பு பேசியிருக்கும் அன்சீன் காட்சிகள் வேற லெவல் சம்பவமாக மாறியிருக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Raju jeyamohan funny talks infront of biggboss camera unseen

People looking for online information on BiggBoss Raju, Raju jeyamohan, RajuJeyamohan will find this news story useful.