Vijay Television: பிக்பாஸ் வீட்டுக்குள் ராஜூ, நிரூப்பிடம் கேட்ட கேள்வியை சீரியஸ் லிஸ்டில் சேர்ப்பதா, ராஜூவின் வேறல்வெல் Thuglife சம்பவங்களின் லிஸ்டில் கேட்பதா என ரசிகர்கள் குழம்பும் அளவுக்கு அந்த கேள்வி ட்ரெண்ட் ஆகியுள்ளது.
BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை நெருங்கி ஒளிபரப்பாகி வருகிறது. கிராண்ட் ஃபினாலே டாஸ்க்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என சொல்லும் அளவுக்கு பிக்பாஸ், டாஸ்குகளை கொடுத்து வருகிறார். ஃபைனல் நெருங்க, நெருங்க அவை இன்னும் வியர்க்க வைக்கும் அளவுக்கும், விறுவிறுப்பை கூட்டும் அளவுக்கும் கண்ணை கட்ட வைக்கின்றன.
Open நாமினேஷன்
முன்னதாக Open நாமினேஷனை அறிவித்த பிக்பாஸ், “நாமினேஷன் பண்ணுவதற்கு யாரும் இல்லையே என்று புலம்ப வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் நாமினேஷன் செய்வதுதான் இந்த வாரம் உங்களுடைய இறுதிப்போட்டி வரை செல்வதற்கான வாய்ப்பாக அமையும். உங்களுடைய வெற்றியை தீர்மானிக்கும்!” என்று கூறியிருந்தார்.
மாலை அணிவித்து நாமினேஷன்
இதன் பொருட்டு ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு போட்டியாளரை குறிப்பிட்டு, அவர்கள் முன்னால் நேரடியாக சென்று அவர்களை நாமினேட் செய்தனர். அதற்கு முன்னதாக அவர்களின் மீது நாமினேஷன் மாலையை போட்டு, அதன் பின்னர் நாமினேஷன் செய்வதற்கான காரணத்தையும் கூறினர். இதேபோல், நாமினேஷனை மறுத்தும் ஒவ்வொரு போட்டியாளரும் விளக்கம் சொல்லவோ, பதில் சொல்லவோ வாய்ப்பு தரப்பட்டது.
சிபியை நாமினேட் செய்த நிரூப்
இந்நிலையில் சிபிக்கு மாலை அணிவித்து அவரை நாமினேட் செய்த நிரூப், முட்டை டாஸ்க்கில் ராஜூ, சிபி, பிரியங்கா என அனைவருமே தங்களுடைய விளையாட்டுகளை தனித்து விளையாடாமல், இணைந்து விளையாடியதாகவும் அது அந்த கேமை விளையாடுவதற்கான ஸ்ட்ராட்டஜி அல்ல என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டு நாமினேட் செய்தார்.
ராஜூவை மக்கள் காப்பாத்திடுவாங்க!
அதிலும் ராஜூவை நாமினேட் செய்தால் அவரை எப்படியும் மக்கள் காப்பாற்றி விடுவார்கள் அதனால் தான் சிபியை நாமினேட் செய்ததாக பேசிய நிரூப், பிரியங்கா கழுத்தில் மாலையை போட்டிருந்தாலும் இதே காரணம் தான் என்றும் சிபியிடம் ஆவர் கூறினார். அப்போது நமக்கு பிடித்தவர்கள் தவறு செய்தாகள் மன்னித்து விடுவோம் என பாவனி சொன்னதை குறிப்பிட்டு பேசிய நிரூப், மக்களும் அந்த வகையில் ராஜூ தப்பு பண்ணினால் மன்னிப்பார்கள், அவனை காப்பாற்றுவார்கள் என்று சொல்கிறார்.
உன்னிட்டம் வெறி இல்லை!
பின்னர் ராஜூ நிரூப்பிடம் பேசும்போது, “அதெப்படி மக்கள் தப்பு பண்ணா மன்னிப்பாங்க? இப்படி என் மீதான குற்றச்சாட்டுகளை சொல்லி சிபியை நாமினேட் செய்வதற்கு பதிலாக என் கழுத்தில் மாலையைப் போட்டு என்னையே நாமினேட் செய்திருக்கலாமே??” என்று கூறுகிறார். அதற்கு நிரூப், “உன்னை நாமினேட் செய்து இருந்தால் உன்னை மக்கள் காப்பாற்றி விடுவார்கள். உன்னிடம் தன்னம்பிக்கையை பார்க்கிறேன். அதேசமயம் உன்னிட்டம் ஒரு வெறி இல்லை, விளையாடும்போது.. ” என்று நிரூப் கூறுகிறார்.
வெறினா எப்படி இருக்கணும்?
உடனே ராஜூ, “எதுல வெறிய பார்க்கல.. எந்தெந்த டாஸ்க்ல பாக்கல. வெறினா எப்படி இருக்கணும்? எனக்கு தெரியலடா. நீ சொல்லிக்கொடு.” என்றெல்லாம் கேட்கிறார். அந்த சீரியஸான கணத்தில் ராஜூ கேட்ட இந்த கேள்வி, படு டிரெண்டிங் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.