வாத்தி கம்மிங்!!.. MASTER ஆனதும் ‘ராஜூ’-வின் வேற மாரி ரெய்டு! களைகட்டும் #BIGGBOSSTAMIL5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் தற்போது புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அனைவரும் பள்ளி கால நினைவுகளுக்கு திரும்புகின்றனர்.

raju become master school life task BiggBossTamil5
Advertising
>
Advertising

இதற்கென போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி சீருடைகளை அணிந்து கொண்டு வலம் வரத் தொடங்கி இருக்கின்றனர். இதில் பலரும் மாணவர்களாகவும் சிலர் வாத்தியார்களும் ஆகியிருக்கின்றனர்.

raju become master school life task BiggBossTamil5

இவர்களுள் ராஜூ, அபிஷேக் மற்றும் புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கும் கோரியோகிராஃபர் அமீர் உள்ளிட்ட பலரும் ஆசிரியர்களாக இருக்கின்றனர். இதேபோல் சிபி வார்டனாகவும் வலம் வருகிறார்.

raju become master school life task BiggBossTamil5

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோவில் ராஜூ, மாஸ்டர் மற்றும் தெறி திரைப்படங்களில் தளபதி விஜய் வருவது போல கையில் குச்சியை வைத்துக்கொண்டு ஐக்கியை விரட்டுகிறார்.

அவர் முன்பு மாணவர்களாக இருக்கும் மற்ற போட்டியாளர்கள் நின்றுகொண்டும், முட்டி போட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தேண்டா பால்காரன் வேக்-அப் பாடலின்போது ராஜூ மற்றும் பிரியங்கா இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் நடந்துவருவதும், அங்கசைவுகளை கொடுத்து அசத்துவதுமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Raju become master school life task BiggBossTamil5

People looking for online information on Biggboss, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Kamal Haasan, Kamal hassan, Master, Thalapathy Vijay, Theri, Vijay will find this news story useful.