ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தில் நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்கள். தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தென்னிந்தியாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார்.
Also Read | Raja Rani 2: மருத்துவமனையில் மொத்த குடும்பமும் ஷாக்!.. "அப்ப நான் அவுட்டா..?" - நடிகரின் வைரல் பதிவு.!
இந்நிலையில் இந்த பட ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி BB Jodigal நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய திரை உலக ஜாம்பவான்களான, இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் மூவரும் வருகை தந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூருக்கு தமிழ் சொல்லித் தந்த ராஜூ, ஆங்கிலத்தில் அவருடன் உரையாடினார். அப்போது தமிழ் மக்களிடம், “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்பதற்கு எந்தெந்த வகையில் கேட்கலாம் என்று சொல்லிக் கொடுத்தார் ராஜூ. அதன்படி தமிழகத்தில் எல்லாரும் தமிழ் பேசினாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வட்டார வழக்கு ஒலி இருக்கிறது. இதை ஸ்லாங் என்கிறோம். அதன்படி மதுரையில் ஒருவிதமான ஸ்லாங் பேசுவார்கள், சென்னையில் ஒருவதுமான ஸ்லாங் பேசுவார்கள், கோயம்புத்தூரில் ஒரு விதமான ஸ்லாங் பேசுவார்கள். ஆகையால் ஒவ்வொரு வட்டார வழக்கு ஒலியிலும் எப்படி இருக்கீங்க என்று கேட்பது எப்படி என்று ரன்பீருக்கு ராஜூ சொல்லிக் கொடுத்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சென்னை வட்டார வழக்கு மொழியை சொல்லிக் கொடுப்பதற்கு முன்பாக சென்னை குறித்த அறிமுகம் ரன்பீருக்கு ராஜூவால் வழங்கப்பட்டபோது, அதாவது சென்னை வட்டார வழக்கு மொழியை பேசும்போது இரிடேட் ஆவது போல் முகத்தை வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்று ராஜூ ரன்பீரிடம் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. ராஜூ சொன்னதற்கான காரணம், சென்னை எப்போதும் சற்றே வெயிலாக இருக்கும் என்பதால் அந்த மூடை பிடித்து பேசும்போது அந்த ஸ்லாங் பேச முடியும் என்பது தான்.
என்றாலும் வேற்று மாநிலத்தில் இருந்து வரும் ஒரு நடிகருக்கு சென்னை குறித்த அறிமுகத்தை இப்படி வழங்குவது முறையல்ல என்றும் பலர் கருதினர். இதை தொடர்ந்து இப்படியான விமர்சனங்கள் எழுந்தன. இதே போல் மதுரை வட்டார வழக்கைச் சொல்லிக் கொடுக்கும் பொழுது மது அருந்துவது போல் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ராஜூ ரன்பீரிடம் கூறியதால் மதுரைக்காரர்களும் கொந்தளித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பகிரங்க மன்னிப்பு கேட்டு இருக்கிறார் ராஜூ. இதை அவர் தனக்கே உரிய கலகலப்பான ஸ்டைலில் பேசி இருக்கிறார்.
இது தொடர்பாக ராஜூ தம் பதிவில், “திரு.ரன்பீர் கபூர் அவர்களுக்கு சென்னை வட்டார வழக்கை நகைச்சுவையாக சொல்லிக்குடுக்கும் காணொளிக்கு சென்னை மக்களை இழிவாக பேசினேன் என விமர்சனம் எழுவதை படித்தேன். நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன்… இரிடேட் ஆகவேண்டாம், மன்னிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | BB Jodigal 2: கப்னு புடிச்சுகிட்ட ரன்பீர்.. அதுவும் வெரைட்டி ஸ்லாங்ல பேசுறார்யா.. செம க்யூட் வீடியோ..