ராஜ்குமார் ஹிரானி - ஷாருக்கான் COMBO.. FUN-ஆக வெளியான 'டைட்டில்' அறிவிப்பு 'வீடியோ'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானுக்கு நாடு கடந்து ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Advertising
>
Advertising

இவரது நடிப்பில், கடைசியாக வெளியான ரயிஸ், பேன், ஜீரோ உள்ளிட்ட படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து, தமிழ் இயக்குனரான அட்லியின் திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஷாருக்கானின் 'பதான்'

இதற்கு முன்பாக, பாலிவுட் திரைப்படமான 'வார்' படத்தை இயக்கிய சித்தார்த்த ஆனந்த் இயக்கத்தில், 'பதான்' என்னும் படத்தில் நடிக்க ஷாருக்கான் கமிட் ஆகி இருந்தார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். அதே போல, மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாமும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

முதல் முறையாக இணையும் காம்போ

பதான் படத்தின் முன்னோட்டமும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளில், 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாருக்கானின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்து அசத்தல் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

முன்னாபாய் MBBS,  3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கானுடன் இணைந்து பணிபுரியவுள்ள தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றி, மிகவும் ஜாலியான ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஷாருக்கான் - ராஜ்குமார் படத்தின் பெயர்

அதில், ராஜ்குமார் ஹிரானி படத்தில் வரும் கதாபாத்திரங்களை எண்ணி மெய் சிலிர்த்து நிற்கிறார் ஷாருக்கான். தொடர்ந்து, தாங்கள் இணையும் திரைப்படத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பது பற்றியும், ஜாலியாக ராஜ்குமாரிடம் கேட்கிறார் ஷாருக்கான். கடைசியில் படத்தின் டைட்டில் என்ன என ஷாருக்கான் கேட்க, 'Dunki' என கூறுகிறார் ராஜ்குமார்.

இதனைக் கேட்டதும், ஷாருக்கான் முகம் மாற, கழுதை என்றும் நினைத்துக் கொள்கிறார். கடைசியில் ராஜ்குமார் படத்தில் நடித்தால் போதும் என்பது போல நகர்ந்து செல்கிறார் ஷாருக்கான். இது தொடர்பான 'Title Announcement' வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும், Dunki திரைப்படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக தாப்ஸி  நடிக்கவுள்ளார். 2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி, Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Rajkumar hirani and shahrukh khan new movie title announced

People looking for online information on Atlee, Dunki, Pathan, Rajkumar Hirani, Shah Rukh Khan, Taapsee Pannu, Title Announcement will find this news story useful.