சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Also Read | நடிகை பூர்ணாவின் திருமண வரவேற்பு.. நடனமாடி அசத்திய மணமக்கள்! வைரல் வீடியோ
நடிகர் கார்த்தி நடிப்பில் 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்ற, பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் வெற்றி குறித்து ரஜிஷா விஜயன், இயக்குனர் மித்ரனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "என்ன ஒரு அருமையான பயணம் மித்ரன் சார். இரண்டு வருடங்களுக்கும் மேலான உங்களின் கடின உழைப்பு இன்று உச்சத்தை எட்டியுள்ளது. உங்கள் வழியில் வரும் அனைத்து பாராட்டுக்களுக்கும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் தகுதியானவர். இந்துவாக என்னை நம்பியதற்கு நன்றி." என ரஜிஷா கூறியுள்ளார்.
இந்த பதிவில் நடிகை லைலா, "சரியாக சொன்னாய் ரஜிஷா, அனைத்து வெற்றிக்கும் மித்ரன் தகுதியானவர். அவர் ஒரு ராக்ஸ்டார்." என லைலா கமெண்ட் செய்துள்ளார்.
Also Read | சந்தானம் நடிக்கும் 'AGENT கண்ணாயிரம்'.. வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு! ரிலீஸ் எப்போ?