‘கணேசனாக’ ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்த கொலமாஸ் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து உருவாகும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி நடிக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஏற்கனவே விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியாகின.  இதேபோல் இப்படத்தின் தொடக்கப் பாடல், டூயட் பாடல் மற்றும் வீட்டு விஷேஷ பாடல் என மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

இதனிடையே அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘கணேசன்’ என்கிற தகவல்கள் கிடைத்திருந்தன. தல அஜித்குமார் நடிப்பில், ஏற்கனவே இயக்குனர் சிவா இயக்கிய வீரம் படத்தில் தல அஜித்தின் பெயர் விநாயகம் என்றும், வேதாளம் படத்தில் கணேஷ் என்றும் பெயர் வைக்கப்பட்டிருந்தன. இந்த வரிசையில் வரிசையில் அண்ணாத்த படத்தின் ஹீரோ பெயரும் கடவுள் விநாயகர் பெயராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நீளம்  2 மணிநேரம் மற்றும் 43 நிமிடங்கள் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தின் Post Production பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தீபாவளிக்கு, அதாவது நவம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சசிகுமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம்.. மாஸாக வெளியான ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinkanth siruthai siva Annaatthe censor and duration update

People looking for online information on Annaatthe, D Imman, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.