வாடகை பாக்கி விவகாரம்... லதா ரஜினிகாந்த் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?!! - வெளியான அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த்-ன் மனைவி லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மனைவி லதா ரஜினிகாந்த், சென்னையில் ஆஷ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார். இந்த கட்டிடத்தின் உரிமையாளருடன் இவருக்கு வாடகை விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, இந்த இடத்தை காலி செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது.. 

இதனிடையே இவ்வழக்கு இன்று நீதிபதியின் விசாரணைக்கு வர, கொரோனா தொற்றால் இடத்தை காலி செய்ய அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2021 ஏப்ரல் மாதத்திற்கு இடத்தை காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறக்கூடாது'' என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையில், ''2020-ல் காலி செய்ய வேண்டிய இடத்தை, கொரோனா தொற்றால் செய்ய முடியவில்லை. அதனால் அவகாசம் கேட்டதற்கு நீதிபதி அதை வழங்கியுள்ளார். மேலும் வாடகை மற்றும் டி.டி.எஸ் தொகையில் எந்த  பாக்கியும் இல்லை'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் லதா ரஜினிகாந்த் அவர்கள் இதன் மூலம் எவ்விதமான நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லதா ரஜினிகாந்த் கொடுத்த அறிக்கை | rajinikanth's wife latha rajinikanth official statement on contempt of court

People looking for online information on Ashram School, Latha Rajinikanth, Rajinikanth will find this news story useful.