'லிங்கா' தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது மக்களிடையே ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான ராக்லைன் வெங்கடேஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவரை அவரது மகனும் மருத்துவருமான அபிலேஷ் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறாராம்.

மேலும் அவர் கொரோனா வைரஸ் பாதித்துள்ள நடிகை சுமலதா அம்பரீஷுடன் கடந்த வாரம் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ராக்லைன் வெங்கடேஷிற்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

நடிகர் ராக்லைன் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Rajinikanth's Lingaa producer hospitalised in Bengaluru ft Rockline Venkatesh | ரஜினிகாந்த்தின் லிங்கா பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமத

People looking for online information on Coronavirus, Rockline Venkatesh, Sumalatha will find this news story useful.