அது போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு - ரஜினியின் லேட்டஸ்ட் பன்ச்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். Central Insititute for Classical Tamil அமைப்பின் இயக்குனராக ஆர்.பி.நிஷாங்கை நியமித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

Advertising
Advertising

ரஜினி வெளியிட்ட அறிக்கையில் சமூக இடைவெளியை வலியுறுத்தியிருந்தார். அதில் ரஜினி கூறியிருப்பது:

"கரோனா வைரஸ்‌ தொற்றால்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உதவியாக தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கும்‌ அனைவருக்கும்‌ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்‌. வழக்கமாக, அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. குறைவாக்த்தான் தெரியும்.

இப்போது நம்மைத் தாக்கியிருக்கும் இந்தக்‌ கொரோனா எனும்‌ அடி சாதாரண அடி அல்ல.இது பல வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் ராட்சசத்தனமான அசுர அடி. இந்த காயத்தின் வலி எதிர்வரும் நாட்களில் நம்மை வேட்டையாடும். இப்போதைக்கு இது தீராது போலத்தான் தெரிகிறது. 

உங்கள் குடும்ப உறுப்பினர்களையும், அவர்களின் தேவைகளையும்‌ கவனித்துக் கொள்வதுடன், அவர்களைப் பத்திரமாக பாதுகாப்பதுதான்‌ உங்களது மிக முக்கியமான கடமையாக இருக்க வேண்டும். எந்த சூழலிலும்‌ சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறாதீர்கள்.  வெளியே செல்லும்போது முகக்‌ கவசத்தை அணிய மறக்காதீர்கள்‌. உடல் ஆரோக்கியம்‌ போச்சுன்னா வாழ்க்கையே போச்சு!!" என்றார்.

கொரோனா வைரஸைப் பற்றி ரஜினிகாந்தின் இந்த அறிக்கை வைரலாகி, இளைஞர்களின் மனதில் விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.

ரஜினி கடைசியாக 2020 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது தனது அடுத்து சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்தே’ படத்தில் நடித்து வருகிறார்,

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth’s latest breaking statement about social distancing

People looking for online information on Annathae, Darbar, Lockdown, Rajinikanth will find this news story useful.