பொன்னியின் செல்வன் வெப்-சீரிஸா? 2 வருடங்களுக்கு பிறகு அப்டேட் கொடுத்த சௌந்தர்யா ரஜினிகாந்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுப்பதாக 2019 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்தார்.சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி-2 படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்த பொன்னியின் செல்வன் வெப் சீரிஸ் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த வெப் சீரிஸ் பற்றி புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.  

அதில் வெப்  சீரிஸ் படத்தின் திரைக்கதை புத்தகத்துடன், படக்குழுவுடன் முன் தயாரிப்பு பணிக்கான ஆலோசனை கூட்டத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, இயக்குனர் சரத்குமார் ஜோதி இந்த வெப் சீரிசை இயக்குவதாகவும், முதல்  சீசனாக புது வெள்ளம் அத்யாயத்தை எடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth’s Daughter Soundarya ponniyin selvan webseries

People looking for online information on Ponniyin Selvan, Soundarya rajinikanth will find this news story useful.