BREAKING : ரஜினியின் அண்ணாத்த... வேற லெவல் மாஸ் அப்டேட் வருகிறது.!! எப்போ தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினியின் அண்ணாத்த படம் குறித்து முக்கியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. 

ரஜினியின் அண்ணாத்த பட அப்டேட் | Rajinikanth's annaatthe movie update coming on this day

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவரது திரைப்படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்போது ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். 

ரஜினியின் அண்ணாத்த பட அப்டேட் | Rajinikanth's annaatthe movie update coming on this day

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பக்கா கமர்ஷியல் திரைப்படமாக அண்ணாத்த உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

ரஜினியின் அண்ணாத்த பட அப்டேட் | Rajinikanth's annaatthe movie update coming on this day

இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து ஒரு முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்று, ரசிகர்களுக்காக ஒரு செம அப்டேட் கொடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக நமது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்து சூழலில், கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் வேலையில் படக்குழு முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

ரஜினியின் பிறந்தநாளுக்கு அவரது தரப்பில் இருந்து செம ட்ரீட்டாக இந்த அப்டேட் இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினியின் அண்ணாத்த பட அப்டேட் | Rajinikanth's annaatthe movie update coming on this day

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.