தனது ரசிகரின் மகள் சௌமியாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்த ரஜினி, தனது ஆறுதல் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் தான் அண்ணாத்த.இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா போன்ற பலரும் நடித்து இருந்தனர். ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிக்கு முதலமைச்சர் முதல் பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறி பதிவிட்டு வந்தனர். ரஜினியின் பிறந்தநாள் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது ரஜினியின் இன்னொரு வீடியோவும் பகிரப்பட்டு வருகின்றது.
அது என்னவென்றால், பெங்களூரைச் சேர்ந்த தனது ரசிகரின் மகள் சௌமியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதை தெரிந்த ரஜினி,தனது ஆறுதல் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது "கண்ணா பயப்படாத, தைரியமா இரு, கொரோனாவால என்னால நேர்ல வர்ற முடியலை உனக்கு ஒன்னும் ஆகாது டா கண்ணா, நா கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் என ஆறுதலாக பேசியுள்ளார் சூப்பர் ஸ்டார். இந்த வீடியோ தற்போது ரஜினி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களது நன்றிகளை கூறி பதிவிட்டு வருகின்றனர். உடல் நலகுறைவால் பாதிக்கபட்ட சௌமியாவிற்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி என்ன படத்தில் போகிறார்,யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கூடிய விரைவில் ரஜினியின் அடுத்தபடம் குறித்த விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.