சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை AGS Entertainment தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் நேரில் சந்தித்து தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த முகநூல் பதிவில், "இதற்கு மேல் வேற என்ன வேண்டும்? இந்த தருணம் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது போல் இருக்கிறது. நல்ல அன்பான வரவேற்பு, இறுக்கமான அணைப்பு, அவருடைய கண்கள், அவருடைய சிரிப்பு, அவருடைய ஸ்டைல் & அன்பு. என்ன ஒரு அற்புதமான மனிதர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தினை பார்த்த பிறகு என்னை வாழ்த்தினார். நீங்கள் சொன்ன வார்த்தைகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன் சார்." என பிரதீப் ரங்கநாதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தியுள்ளார்.