BREAKING: அமெரிக்கா செல்கிறாரா சூப்பர் ஸ்டார்?... எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | களைகட்டும் CWC 3… சிவகார்த்திகேயன் surprise எண்ட்ரி.. Excite ஆன போட்டியாளர்கள்..! தெறி ப்ரோமோ..

அண்ணாத்த…

நடிகர் ரஜினிகாந்த்தின் சமீபத்தைய திரைப்படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் அமைந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸானது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி மற்றும் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அண்ணாத்த திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இயக்குனர் சிவாவின் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார்.

தலைவர் 169…

சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து மீண்டும் சன்பிக்சர்ஸுக்கே தனது அடுத்த படத்தையும் நடிக்க முடிவெடுத்துள்ளார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கக்கூடிய "தலைவர் 169 (தற்காலிகப் பெயர்)" திரைப்படம் குறித்த அறிவிப்பு  சிறிய வீடியோவோடு வெளியானது. அதில் ரஜினி, இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த கட்ட தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அமெரிக்கா செல்கிறாரா ரஜினி?...

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் பற்றி முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சில முறை அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு நண்பர்களை சந்திப்பது. ஜாலியாக சாலையில் நடந்து செல்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BREAKING: அமெரிக்கா செல்கிறாரா சூப்பர் ஸ்டார்?... எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Reportedly will fly to America this week

People looking for online information on Rajinikanth, Rajinikanth recent updates, Super Star Rajinikanth will find this news story useful.