செஸ் விளையாடும் ரஜினிகாந்த்.. மாஸான THROWBACK போட்டோவை வெளியிட்டு வீரர்களுக்கு வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் செஸ் விளையாடும் த்ரோ பேக் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் சீதா ராமம்.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்!

சென்னை மகாபலிபுரத்தில் வைத்து, 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இனறு (28.07.2022) ஆரம்பமாகி உள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி & தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டணர்.

இதில், பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 2,000 வீரர் மற்றும் வீராங்கனைகள் வரை பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் 6 பிரிவுகளாக களமிறங்க உள்ளார்கள்.

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக அரசு சார்பில் நடைபெற்றிருந்தது. உள்ளரங்க அமைப்பு, வீரர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் செஸ் விளையாடும் த்ரோ பேக் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்திற்கு தலைப்பாக "உள்ளரங்க விளையாட்டுகளில் நான் மிகவும் விரும்பும் விளையாட்டு சதுரங்கம். போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள் " என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் படத்தின் முன்னோட்டம் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | சரஸ்வதி தேவி முன் தனுஷ்.. பிறந்தநாளில் ரிலீசான 'வாத்தி' போஸ்டர்! செம்ம கெத்து

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Playing Chess Throwback Picture goes Viral

People looking for online information on Rajinikanth, Rajinikanth Playing Chess, Super Star Rajinikanth throwback will find this news story useful.