பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் கார்த்தியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
Also Read | PS1: பிரபல தியேட்டரில் பொன்னியின் செல்வன்.. படம் பார்த்த ஷாலினி அஜித் குடும்பம்!
அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” வெளியானது முதல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மேலும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர்.
சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் படத்தினை பார்த்த பிறகு நடிகர் கார்த்தியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகர் கார்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் வேலையைப் பாராட்டுவதற்கு அவர்களை சென்றடைய நீங்கள் தரும் மரியாதை மற்றும் நீங்கள் எங்களுக்குத் தரும் மகிழ்ச்சி எப்போதும் அன்பானதாக இருக்கிறது. நன்றி சார். நிறைய அன்பும் மரியாதையும் கார்த்தி" என கூறியுள்ளார்.
மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார். அதில், "கமல் சார் நீங்கள் சினிமாவில் பெரிய இலக்குகளைத் தேடுவதற்கும் உயர்ந்த தரத்தை அமைக்கவும் எங்களை எப்போதும் தூண்டிவிட்டீர்கள் ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக் கொடுத்தீர்கள். நிறைய அன்பும் மரியாதையும். கார்த்தி" என கூறியுள்ளார்.
Also Read | தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா? எல்லா சாதனைகளையும் முறியடித்த PS1!