ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசிய வழக்கு - நீதிமன்றம் அதிரடி முடிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, ''பெரியார் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் ராமன் சீதையை ஊர்வலமாக கொண்டு சென்றதாகவும் அதனை துக்ளக் இதழ் மட்டுமே அந்த செய்தியை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

இது செய்தி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்று ஒரு தரப்பினர் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினியின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், குறிப்பிட்ட நாளிதழில் அந்த செய்தி வெளியாகியுள்ளதாகவும் அதன் பெயரிலேயே அந்த கருத்தினை வெளியிட்டதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த்திற்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth, Periyar Controversy Court Dismissed the case

People looking for online information on Periyar, Rajinikanth will find this news story useful.