சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் சண்டைக் காட்சி இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Also Read | கொல மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளியானது ஜெயிலர் படத்தின் FIRST LOOK போஸ்டர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த போஸ்டர் பெற்றுள்ளது. வெளிவந்த தருணத்தில் இருந்து போஸ்டர் டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் நெல்சன் உடன் தனது மகன்கள் கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமாருடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்திய அகண்டா பட சண்டை காட்சிகள் மூலம் ஸ்டன் சிவா ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
மாஸ்டர் திலிப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, அன்பறிவ், பீட்டர் ஹெய்ன் மற்றும் ராம்-லக்ஷ்மண் ஆகியோர் முறையே ரஜினியின் அண்ணாத்த, 2.0, கபாலி, பேட்ட மற்றும் தர்பார் போன்ற சமீபத்திய படங்களுக்கு சண்டைக் காட்சி இயக்குனராக பணிபுரிந்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது சிவாவும் இணைந்துள்ளார்.
Also Read | இந்தியா டிரெண்ட்டில் முதலிடம்.. மாஸ் காட்டும் ஜெயிலர் FIRST LOOK போஸ்டரை டிசைன் பண்ணது இவரா? செம