மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த்.. என்ன ஆச்சு? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற தகவல்கள் வெளியாகி வந்தன.

Advertising
>
Advertising

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள லதா ரஜினிகாந்த், நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் சென்னை  காவேரி மருத்துவமனை சென்றுள்ளார் என்றும், ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து பரிசோதனை மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய அரசின் உயரிய விருதான தாதே சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், தான் நடித்த அண்ணாத்த படத்தை குடும்பத்துடன் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தில் ரஜினி காளையன் என்கிற பெயரில் நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், வேல ராமமூர்த்தி, சூரி, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்துக்கு, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth hospital master check up chennai latha explains

People looking for online information on Rajini Health, Rajini health update, Rajini hospital, Rajinikanth, Rajinikanth Health will find this news story useful.