நடிகர் ரஜினிகாந்த்தின் மகளான சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் HOOTE APP மூலமாக பதிவிடலாம்.
ப்ளே ஸ்டோரிலும் டவுன்லோடு செய்துகொள்ளக் கூடிய இந்த ஆப்பில், மொபைல் நம்பர் அல்லது இ-மெயில் ஐடி மூலம் பயனாளர்கள் ரிஜிஸ்டர் பண்ண முடியும். அந்த நேரத்தில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளின் விருப்பத் தேர்வை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளதாக ரஜினி கொடுத்திருந்தார். அவ்வகையில் ரஜினி உட்பட பல்வேறு பிரபலங்கள் இந்த ஆப்பில் இணைந்துள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்த் தமது முதல் கருத்து பகிர்வை தமது குரலில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மரியாதைக்குரிய பத்திரிகை நண்பர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள். சௌந்தர்யா விசாகன் உருவாக்கியுள்ள Hoote App-ஐ துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சௌந்தர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இனி எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், சமூக வலைதளங்கள் மூலமாக மற்றவர்களுக்கு அவர்கள் தெரிவிக்க நினைக்கும் கருத்துக்களை எளிதாக அவர்களுடைய குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம்.
இது ஒரு அருமையான செயலி. எதிர்காலத்தில் இந்த இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற வளர்வதற்கு வாழ்த்துகிறேன். வாழ்க மக்கள். வளர்க தமிழ்! ஜெய்ஹிந்த்!” என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார். இந்த செயலியின் அறிமுக விழாவில், ரஜினிகாந்த் பேசிய இந்த இணைப்பை பகிர்ந்து, இந்த செயலியை சௌந்தர்யா விசாகன் அறிமுகப்படுத்தினார்.