ஆஹா.. ரஜினியின் ஆதர்ச கேரக்டர் பெயர் தான் ‘அண்ணாத்த’ படத்திலும்.. பட்டையை கிளப்பும் டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் அண்ணாத்த.

Advertising
>
Advertising

இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தல அஜித் நடிப்பில் பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, சூரி, வேல ராமமூர்த்தி, ஜார்ஜ் மரியன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.‌

வெற்றியின் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த சிங்கிள் பாடல்கள் வெளியாகின.

குறிப்பாக அண்ணாத்த என்று தொடங்கும் தொடக்க பாடல், மருதாணி என்கிற விசேஷ பாடல், சார காற்றே என்கிற காதல் பாடல், வா சாமி என்கிற பூஸ்டர் பாடல் என தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.‌ இந்நிலையில் இந்த திரைப் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதன்படி அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் பெயர்  ‘காளையன்’என்பதும் அவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் என்கிற செய்தியும் டிரைலரில் இடம் பெற்றிருப்பது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்த பெயரில் ஒரு விசேஷம் உள்ளது.

ஆம், 1980-ஆவது வருடம் ரஜினிகாந்த், ரதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முரட்டுக்காளை. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படமும் திரை படத்தின் பாடல்களும் அந்த நேரத்தில் ஹிட் அடித்தன. முக்கியமாக இந்த திரைப்படத்தில் ரஜினியின் பெயர் மிக முக்கியமானது.

‘காளையனுக்கு ஜே’ என்று பாட்டிலேயே ரஜினியின் கேரக்டர் பெயர் இடம்பெறும். அந்த அளவுக்கு இந்த திரைப்படத்துக்கு பிறகும் சரி இந்த திரைப்படத்திலும் சரி, ‘காளையன்’ என்கிற இந்த பெயர் பிரபலமாகி இருந்தது. பஞ்சு அருணாசலம் கதை எழுதிய இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.

இதேபோல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1990ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அதிசய பிறவி. இந்த திரைப்படத்தில் பல்வேறு வேடங்களில் ரஜினி நடித்திருப்பார். இதில் முக்கியமான 2 ஹீரோ வேடங்களில் ரஜினி நடித்திருப்பார். அதில் ஒரு ரஜினிக்கு காளையன் என்கிற பெயர் சூட்டப்பட்டு இருக்கும். இப்படி ரஜினியின் படங்களில் காளையன் என்பது ஒரு முக்கியமான சென்டிமெண்ட் மற்றும் வெற்றிப் பெயராக இருப்பது என்பது ரசிகர்களால் நிச்சயம் மறக்க முடியாதது.

அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

அத்துடன், நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth epic character name Annaatthe Trailer siva

People looking for online information on Annaatthe, D Imman, Keerthi Suresh, Nayanthara, Rajinikanth, Siruthai Siva, Soori, Sun pictures will find this news story useful.