இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இலங்கையில் இன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளான இன்று, கொழும்பு நகரில் உள்ள சில தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், சற்றும் எதிர்பாராதவிதமாக 4 தேவாலயங்களில் ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

இத்துடன் 2 ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகள் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், “ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை” என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth deeply saddened by the news of bomb blast in Srilanka on Holy Easter day

People looking for online information on Easter Day, Rajinikanth, Srilanka Bomb blast will find this news story useful.