சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடித்து, லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2020 பொங்கலுக்கு (ஜனவரி 9) வெளியான ‘தர்பார் திரைப்படம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜப்பான் நாட்டில் பெரும் ரசிகர் பலம் உள்ளது. கவிதாலயா தயாரிப்பில் வெளியான ‘முத்து’ படம் ஜப்பானில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அந்த படத்தில் இருந்து ரஜினி படங்கள் தொடர்ச்சியாக ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ‘தர்பார்’ படமும் 'தல்பார்' என்ற பெயரில் ஜப்பானில் ரிலிசாகியுள்ளது.
ஜப்பானில் ஜூலை 16 அன்று வெளியான ‘தர்பார்’, 21ஆம் தேதி வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியுள்ளது.
படம் வெளியாகி தற்போது ஒருவாரம் ஆன நிலையில், படத்துக்கு கிடைத்த நல்ல வரவேற்பால் ஜப்பானின் மற்ற சிறிய நகரங்களான கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது.
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அகமது.