TWITTER-ல புது DP மாத்துன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதான் காரணமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் DPயை மாற்றி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ஆஹா.. இயக்குநர் பாக்யராஜ்.. சீரியலில் சிறப்பு எண்ட்ரி .. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா.?

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த 169 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் துவங்கி உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய முகப்பு படத்தை மாற்றியுள்ளார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.‌

இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.‌ அசாதி கி அம்ரித் மஹாஉத்சவ் என இந்த நிகழ்வில் 75 வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது சமூக வலைத்தளங்களில் உள்ள இந்தியர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை முன்னிட்டு தற்போது ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தேசிய கொடியை முகப்பு படமாக வைத்துள்ளார்.

Also Read | தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'.. கேரள உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Changed Display Picture in Twitter 75th Independence day

People looking for online information on 75th independence day, ரஜினிகாந்த், Rajinikanth, Rajinikanth Changed Display Picture in Twitter will find this news story useful.