‘இதெல்லாம் 2K KIDS பாத்துருக்க மாட்டாங்க’.. ரஜினியின் 73வது பிறந்தநாள்.. VIRAL த்ரோபேக் ஃபோட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய பிரபல நடிகரும் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், தன்னுடைய 73-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

Advertising
>
Advertising

Also Read | வைரலாகும் ஜிகர்தண்டா DOUBLE X போஸ்டர்கள்.. டிசைனர் இவரா? கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த அப்டேட்!

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் பிரபலமான ரஜினிகாந்த், பின்னர் தமது 47 வருட திரைப்பயணத்தில், பல சாதனைகள் படைத்துள்ளார். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, ஹீரோயிஸம், வில்லத்தனம் உட்பட நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். உலகம் முழுக்க பல ரசிகர்களால் கொண்டாட படும் நடிகர் ரஜினிகாந்த், 2019 ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், திரைத்துறையின் உயரிய சாதனை விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார்.

ஸ்டைலிஷ் மற்றும் கமர்சியல் நடிகராக திரை உலகில் 70-கள் தொடங்கி முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி இருந்த அண்ணாத்த திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. இதில் ரஜினியுடன் 80 மற்றும் 90-களில் நடித்த மீனா, குஷ்பு ஆகிய நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்.

ஜெயிலர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.   இந்த படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோகுலம் ஸ்டூடியோஸில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்படும்.  இந்நிலையில் இவ்வருடமும் நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல அரசியல், திரை என பலதரப்பட்ட பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே ரஜினிகாந்த்தின் பல த்ரோபேக் புகைப்படங்களும் அவரது பிறந்த நாளில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த்தின் 90களில் எடுக்கப்பட்ட பல அரிய புகைப்படங்கள் அவரது இந்த பிறந்த நாளில் வைரலாகி வருகின்றன.

Also Read | Thunivu : துணிவு படத்துக்காக அஜித்துக்கு சிலை வெச்ச ‘வீரம்’ உணவக உரிமையாளர்..

Rajinikanth Birthday 2022 dec 12 wishes pics trending

People looking for online information on Happy birthday Rajini, HBD Thalaiva, Rajinikanth Birthday, Rajinism, Thalaivar Birthday will find this news story useful.