ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாசின் கூட்டணியில் உருவாகியிருக்கும் தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
