அண்ணாத்த படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை வாங்கிய உதயநிதி? பார்முக்கு வந்த ரெட் ஜெயன்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2008 ஆம் ஆண்டு ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல தமிழ் படங்களை தயாரித்து வினியோகித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin). 

அதில் குருவி (Kuruvi), மன்மதன் அன்பு, ஏழாம் அறிவு போன்ற படங்களும் அடக்கம், இது போக பேட்ட (Petta), மங்காத்தா (Mankatha) படங்களை வினியோகம் செய்துள்ளது ரெட் ஜெயண்ட். இந்நிலையில் நேற்று (15.09.2021) ஆர்யா நடிப்பில் அரண்மனை-3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குனர் சுந்தர்.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, Benzz Media CEO R.மதன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை உறுதி செய்யும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அண்ணாத்த (Annaatthe) திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. 

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ரஜினிகாந்த் (Rajinikanth) நடிக்கும் அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth annaatthe movie theatrical rights bagged by

People looking for online information on Annaatthe, Rajinikanth, Udhayanidhi Stalin will find this news story useful.