மரண மாஸ்னா இதான்! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த படத்தின் TEASER! தரமான செய்கை! SIVA & TEAM!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, கலை இயக்குனர் மிலன், இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன் மீண்டும் இணைந்த படம் 'அண்ணாத்த'.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், வேல. ராம மூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.

தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ஏற்கனவே அண்ணாத்த அண்ணாத்த, சாரக்காற்றே எனும் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரிலீசானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்ட டீசர் இன்று (14.10.2021) வெளியாகி உள்ளது. 

வெளியானது முதல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை டீசர் பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே உரிய மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் டீசரின் சிறப்பம்சமாக உள்ளன.  

மரண மாஸ்னா இதான்! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த படத்தின் TEASER! தரமான செய்கை! SIVA & TEAM! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Annaatthe Movie Marana Mass Teaser Released

People looking for online information on D Imman, Keerthy Suresh, Milan, Nayanthara, Rajinikanth, Siva, Vetri Palanisamy will find this news story useful.