சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அக்டோபர் 4 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு ஏற்கனவே அண்ணாத்த அண்ணாத்த, சாரக்காற்றே எனும் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரிலீசானது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டீசர் அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.
இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் பின்னணி இசைக்கோர்ப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை புகழ் பெற்ற பிரபல நாதஸ்வர கலைஞரும், ஈழத்தமிழருமான குமரன் முகநூலில் பகிர்ந்துள்ளார். இதில் இசையமைப்பாளர் இமானுடன் அவர் ஸ்டூடியோவில் நாதஸ்வரம் வாசிக்கிறார்.