LATEST: அண்ணாத்த அதிரடி சரவெடி! SP பாலசுப்ரமணியம் ரஜினிக்கு பாடிய கடைசி பாடல் ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

rajinikanth annaatthe first single released with spb vocal

தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

rajinikanth annaatthe first single released with spb vocal

ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

ரஜினி - எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றது. ரஜினி படங்களின் துவக்க பாடல்களை பாலசுப்ரமணியம் பாடுவதை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்த்திருப்பர். கடந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று கொரோனா, நுரையீரல் செயலிழப்பு காரணமாக மரணமடைந்தார். இறப்பதற்கு சில நாட்கள் முன் அண்ணாத்த படத்திற்காக, இமான் இசையில் ரஜினியின் துவக்க பாடலை பாடி கொடுத்துள்ளார் பாடகர் S. P. பாலசுப்ரமணியம்.

பாடகர் S. P. பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் இன்று அக்டோபர் 4 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்தது. அதன் படி அண்ணாத்த அண்ணாத்த எனும் முதல் பாடல் ரிலீசானது. இமான் இசையில் பாடலாசிரியர் விவேகா பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

மதுரை மாவட்டத்தை சுற்றி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக பாடல்வரிகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் விண்டேஜ் ரஜினியின் நடன அசைவுகளும் வீடியோவிற்கு இடையே அமைந்து ரஜினி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.

LATEST: அண்ணாத்த அதிரடி சரவெடி! SP பாலசுப்ரமணியம் ரஜினிக்கு பாடிய கடைசி பாடல் ரிலீஸ்! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth annaatthe first single released with spb vocal

People looking for online information on Imman D, Rajinikanth, Siva, SPB, Vetri will find this news story useful.